News September 2, 2025
அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

குறுஞ்செய்தி, சமூக வலைதளம், மின்னஞ்சல் மூலம் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என அரியலூர் மாவட்ட காவல்துறையினர் “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்று எச்சரித்துள்ளனர். மேலும், சிறிய முதலீடுகளின் மூலம் அல்லது சில வணிக வாய்ப்புகளின் மூலம் அதிக வருமானத்தை பெறலாம் என்று கூறும் எந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தையும் நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT NOW…
Similar News
News September 2, 2025
அரியலூர்: ரூ.2.10 லட்சம் வரை மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<17593082>>பாகம்-2<<>>)
News September 2, 2025
அரியலூர்: ரூ.2.10 லட்சம் வரை மானியம்! (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..
News September 2, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்க கட்டிடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை, இன்று மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு தற்போது வரை முடிக்கப்பட்ட பணிகளின் விவரம் மற்றும் எஞ்சியுள்ள பணிகளின் விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.