News September 2, 2025
காஞ்சிபுரம் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் வாடிக்கையாளர் பாட்டில் வாங்கும் போது ரூ.10 கூடுதலாக செலுத்தி, மீண்டும் காலி பாட்டிலை ஒப்படைக்கும்போது ரூ.10 திரும்ப வழங்கப்படும் என திட்டம் அமலுக்கு வந்தது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு டாஸ்மாக் சங்க தலைவர் பிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News September 2, 2025
காஞ்சியில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

காஞ்சி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News September 2, 2025
மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான டாஸ்மார்க் மதுபான கடைகளும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்களும் நாள் முழுவதுமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
News September 2, 2025
காஞ்சிபுரம்: தமிழ் தெரிந்தால்.. வங்கியில் வேலை

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <