News September 2, 2025
விஜய்யுடன் கூட்டணியா? அதிகாரப்பூர்வ தகவல்

தவெகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த OPS, ‘எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்றார். OPS-ன் இந்த பதில், அவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதையும், NDA கூட்டணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், அவர் இந்த ஆப்ஷனுக்கு வருவார் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Similar News
News September 2, 2025
முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக வீண் விளம்பரம்: அதிமுக

முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக வீண் விளம்பரம் செய்வதாக அதிமுக சாடியுள்ளது. அதிமுக பேச்சாளர் கோவை சத்யன் தனது X தள பதிவில் KNORR-BREMSE நிறுவனம் 1993ல் இருந்தே இந்தியாவுக்கு ரயில்வே உபகரணங்களை அளித்து வருவதாகவும், அந்நிறுவனத்திற்கு ஹரியானாவில் அலுவலகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இங்குள்ள நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட CM ஸ்டாலின் எதற்காக ஜெர்மனி சென்றார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 2, 2025
உருவானது புயல் சின்னம்.. மழை கொட்டித் தீர்க்கும்

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக IMD அறிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 7 நாள்களுக்கு மழை பெய்யும் என்றும் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், கவனமா இருங்க நண்பர்களே!
News September 2, 2025
TMC என்றால் எத்தனை லிட்டர் தண்ணீர் தெரியுமா?

காவிரி, மேட்டூர் அணை நீர்மட்டம் குறித்து பேசும்போது, அடிக்கடி TMC என்ற சொல்லை கேட்டிருப்போம். TMC என்பதன் விரிவாக்கம் ‘Thousand Million Cubic feet’. இது நீரின் அளவை அளக்கும் அலகு ஆகும். ஒரு TMC என்பது 28 பில்லியன் லிட்டர், அதாவது 2,830 கோடி லிட்டர்கள். நதிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள் எவ்வளவு தண்ணீர் சேமிக்கின்றன, எவ்வளவு தண்ணீரை வெளியேற்றுகின்றன என்பதை அளக்க TMC பயன்படுத்தப்படுகிறது. SHARE IT.