News September 2, 2025
கமல் அப்பவே அப்பிடி: லோகேஷ் ருசிகரம்

கமல்ஹாசன் எப்போதுமே தமிழ் சினிமாவை தொலைநோக்கு பார்வையுடன் பார்ப்பவர் என்ற கருத்து சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது உண்டு. இதனை ஆமோதிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில், 15 ஆண்டுகளுக்கு முன்பு OTT குறித்து பேசியவர் தான் கமல் என்றார். அப்போது நமக்கு OTT பற்றி தெரியாது. ஆனால், இப்போது OTT இல்லாமல் படமே ரிலீஸ் ஆகாது என்ற நிலையில் உள்ளோம் என்றார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 2, 2025
GMail பயனர்களுக்கு ஆபத்தா? உண்மையை உடைத்த கூகுள்

பல கோடி பேரின் G-Mail கணக்குகள் ஹேக் ஆகும் அபாயம் இருப்பதால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றக் கூறி கூகுள் அறிவுறுத்தியதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்நிலையில், தாங்கள் அப்படி எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், GMail-ல் ஹேக்கர்ஸ் உள்நுழைய முற்படுவது வழக்கம் என்றாலும், அதனை தடுக்கும் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
News September 2, 2025
USA-வுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது: பியூஷ் கோயல்

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர், சீன அதிபருடனான PM மோடியின் சந்திப்பை அடுத்து டிரம்ப் இந்தியாவை கடுமையாக விமர்சித்த நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியா – அமெரிக்க உறவு என்பது ஒருதலை பட்சமானது, இந்தியாவே அதிக லாபம் ஈட்டுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
News September 2, 2025
முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக வீண் விளம்பரம்: அதிமுக

முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக வீண் விளம்பரம் செய்வதாக அதிமுக சாடியுள்ளது. அதிமுக பேச்சாளர் கோவை சத்யன் தனது X தள பதிவில் KNORR-BREMSE நிறுவனம் 1993ல் இருந்தே இந்தியாவுக்கு ரயில்வே உபகரணங்களை அளித்து வருவதாகவும், அந்நிறுவனத்திற்கு ஹரியானாவில் அலுவலகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இங்குள்ள நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட CM ஸ்டாலின் எதற்காக ஜெர்மனி சென்றார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.