News September 2, 2025
மூளையைத் தின்னும் அமீபா: அரசு முக்கிய உத்தரவு

கேரளாவில் ஆகஸ்டில் மட்டும் மூளையைத் தின்னும் அமீபா பரவலால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னை, அதன் அண்டை மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சிமலை அடிவார மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நன்னீரில் உள்ள அமீபா பரவலால் இத்தொற்று ஏற்படும் என்பதால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் நட்சத்திர ஓட்டலில் உள்ள குளங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் விழிப்புணர்வு புகைப்படம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் செப்டம்பர் 2 இன்று (குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
News September 2, 2025
GMail பயனர்களுக்கு ஆபத்தா? உண்மையை உடைத்த கூகுள்

பல கோடி பேரின் G-Mail கணக்குகள் ஹேக் ஆகும் அபாயம் இருப்பதால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றக் கூறி கூகுள் அறிவுறுத்தியதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்நிலையில், தாங்கள் அப்படி எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், GMail-ல் ஹேக்கர்ஸ் உள்நுழைய முற்படுவது வழக்கம் என்றாலும், அதனை தடுக்கும் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
News September 2, 2025
USA-வுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது: பியூஷ் கோயல்

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர், சீன அதிபருடனான PM மோடியின் சந்திப்பை அடுத்து டிரம்ப் இந்தியாவை கடுமையாக விமர்சித்த நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியா – அமெரிக்க உறவு என்பது ஒருதலை பட்சமானது, இந்தியாவே அதிக லாபம் ஈட்டுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.