News September 2, 2025
அந்த கண்ணு இருக்கே: மாளவிகா க்ளிக்ஸ்

அந்த சூரியனே அவள் மீது பட்டதும் வெட்கத்தில் சற்றே மறைந்துவிட்டது போல. ஆனால் அவளது பார்வையோ புத்தகத்தில் இருக்க, ரசிகர்களின் மனதோ அதில் எழுத்துக்களாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம், மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஸ் தான். இதனை மேலே பார்க்கலாம். கார்த்தி உடன் ‘சர்தார் 2’ படத்தில் நடித்துவரும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஹ்ருதய பூர்வம்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Similar News
News September 2, 2025
₹1,000 மகளிர் உரிமை தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின், தமிழகம் திரும்பியதும் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி புதிய அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியான மகளிருக்கு எப்போது ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அரசு வெளியிட உள்ளதாம். தயாராக இருங்க தாய்மார்களே..!
News September 2, 2025
செமிகண்டக்டர் டிஜிட்டல் டைமண்ட்: PM மோடி

செமிகண்டக்டர் துறையில் இந்திய உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக, PM மோடி <<17589714>>செமிகான் இந்தியா<<>> மாநாட்டில் தெரிவித்துள்ளார். வணிக சந்தையில் எண்ணெய் ’கருப்பு தங்கம்’ என்றால், செமிகண்டக்டர் (Chips) ‘டிஜிட்டல் டைமண்ட்’ என மோடி வர்ணித்துள்ளார். முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்த அவர், விரைவில் ‘மேட் இன் இந்தியா’ பொருட்கள் உலக சந்தையை அலங்கரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
BREAKING: செங்கோட்டையன் விலகல்? EPS பதில்

EPS மீது அதிருப்தியில் இருக்கும் <<17589254>>மூத்த தலைவர் செங்கோட்டையன்<<>>, 5-ம் தேதி மனம் திறந்து பேசவுள்ளதாக இன்று காலையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசியலில் பரபரப்பு தொற்றியது; குறிப்பாக அவர் அதிமுகவில் இருந்து விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், செங்கோட்டையன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்று மாலை பதிலளிப்பதாக EPS தெரிவித்துள்ளார்.