News September 2, 2025
தோனிக்கு Away போட்டிகளே கிடையாது: ரவி பிஷ்னோய்

IPL தொடரில் தோனிக்கு Away போட்டிகள் என்பதே கிடையாது என்று ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், எந்த மைதானமாக இருந்தாலும் களத்திற்குள் வந்தாலே ‘தோனி தோனி’ என அனைவரும் ஆர்ப்பரிக்க தொடங்கி விடுகின்றனர் என நெகிழ்ந்துள்ளார். மேலும், தன் மீதான சந்தேகங்களை தவறு என தொடர்ந்து அவர் நிரூபிப்பதாலேயே இன்னும் அவர் விளையாடி வருகிறார் என்றார். தோனி என்றதும் நினைவுக்கு வருவது என்ன?
Similar News
News September 2, 2025
இந்தியாவில் எடுபடாத டெஸ்லா கார் விற்பனை

எலான் மஸ்கின் டெஸ்லா, எலக்ட்ரிக் கார் விற்பனையை சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியது. ஆனால், அதிக வரியின் காரணமாக டெஸ்லா கார்களின் விலை மற்ற EV கார்களை ஒப்பிடுகையில் மிக அதிகம் என்பதால் அதன் விற்பனை மந்தமாகவே உள்ளது. இதுவரை 600 கார்களே இந்தியாவில் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் எடுத்துக்கொண்டால் உலகளவில் ஒரு மணி நேரத்தில் டெஸ்லா 600 கார்களை விற்பனை செய்து வருகிறது.
News September 2, 2025
BREAKING: அதிமுகவில் மீண்டும் சசிகலா, OPS.. புதிய தகவல்

செப்.5-ம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக தெரிவித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், புதிய திட்டத்தை தீட்டி வருகிறாராம். ஒருங்கிணைந்த அதிமுகவை மீண்டும் கட்டமைக்க, அவர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சசிகலா, OPS இருவரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்துதான் செங்கோட்டையனும் 5-ம் தேதி பேச உள்ளாராம். இதற்கு EPS சம்மதம் தெரிவிப்பாரா?
News September 2, 2025
பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பின்தங்கிய இந்தியா

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 17 ஆண்டுகளாக ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அமைதி குறியீட்டு அறிக்கையின்படி, அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா, பின்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா 115-வது இடத்திலும், பாக்.,144-வது இடத்திலும் உள்ளன. 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் ரஷ்யா கடைசி இடத்தில் உள்ளது.