News September 2, 2025
விஜய் சேதுபதிக்கான கதையில் நடிக்கும் சூரி?

சூரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், சூரி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ‘மாமன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
Similar News
News September 2, 2025
₹500 நோட்டுகள் செல்லாது? Factcheck

செப்.30-ம் தேதியுடன் ₹500 நோட்டுகளை ATM-களில் நிறுத்தப்போவதாகவும், அதன் பிறகு ₹500 நோட்டுகள் செல்லாது எனவும் வாட்ஸ்ஆப்பில் மீண்டும் தகவல் பரவி வருகிறது. இதனை மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB FACTCHECK) மறுத்துள்ளது. ₹500 நோட்டுகள் ரத்து தொடர்பாக RBI எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் ₹100, ₹200 நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
News September 2, 2025
CINEMA ROUNDUP: சின்னத்திரையில் பார்த்திபன்!

*சின்னத்திரையில் ‘பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குகிறார் பார்த்திபன்.
*மாலை 7 மணிக்கு குமரன் நடித்துள்ள ‘குமார சம்பவம்’ பட ட்ரெய்லர் வெளியாகிறது.
*’மார்கன்’ படத்தில் நடித்து அஜய் திஷன் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘பூக்கி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
*Wednesday சீசன் 2 கடைசி 4 எபிசோடுகள் நாளை நெட்பிளிக்ஸ் OTT-யில் வெளியாகிறது.
News September 2, 2025
தீபாவளி பரிசு… சம்பளம் உயர்கிறது

மத்திய அரசின் புள்ளியியல் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். இதன் அடிப்படையில், தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 55%-லிருந்து 58%ஆக 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், தமிழக அரசும் அகவிலைப்படியை 3% உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.