News September 2, 2025

இந்தியாவில் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026

image

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026, டெல்லியில் நடைபெறும் என்று உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்டில் டெல்லியில் போட்டிகள் நடைபெறும். முன்னதாக கடந்த 2009-ல் ஹைதராபாத்தில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 2, 2025

வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் சௌபின்

image

மலையாளத்தில் கலக்கி வந்த நடிகர் சௌபின் சாஹிர், ’கூலி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். ’மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தை தயாரித்ததில் மோசடி செய்ததாக சமீபத்தில் அவர் கைதாகி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் அவர் வெளிநாட்டுக்கு செல்ல தடை உள்ளது. இந்நிலையில் துபாயில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

News September 2, 2025

WhatsApp யூஸர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

image

சில தொழில்நுட்ப குறைபாடுகளால், WhatsApp மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக WhatsApp அறிவித்துள்ளதை மத்திய அரசின் CERT-In உறுதிப்படுத்தியுள்ளது. WhatsApp for iOS, WhatsApp Business for iOS & WhatsApp for Mac பயன்படுத்துவோரின் கணக்குகளில் Authorisation இல்லாமலே உள்நுழைந்து, டேட்டா ஹேக் செய்யப்படுகிறதாம். இதிலிருந்து தப்பிக்க, WhatsApp-ஐ அப்டேட் செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News September 2, 2025

புதிய உச்சத்தில் UPI: 2,000 கோடி பரிவர்த்தனைகள்!

image

Google Pay, Paytm, PhonePe போன்ற UPI பரிவர்த்தனைகள் அத்தியாவசியமாக மாறிவிட்ட நிலையில், நாளுக்கு நாள் அதன் பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்டில் 2,000 கோடி UPI பரிவர்த்தனை, அதாவது கிட்டத்தட்ட ₹24.85 லட்சம் கோடியை மக்கள் பரிவர்த்தனை செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஆகஸ்டில் ஒரே நாளில் 72 கோடி பரிவர்த்தனைகளும் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!