News September 2, 2025

விருதுநகரில்மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

image

விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செப்.2ம் தேதி காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் நடைபெற உள்ளது. விருதுநகர் கூட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் லதா செய்தி வெளியீட்டின் மூலம் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 2, 2025

விருதுநகரில் இனி Whatsapp மூலம் தீர்வு

image

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News September 2, 2025

சிவகாசியில் ஜல் ஜீவன் திட்டத்தில் நூதன மோசடி?

image

சிவகாசி அருகே வெள்ளூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குடிநீர் குழாய் இணைக்கப்படுவதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் இங்கு 4 முதல் 5 வீடுகளுக்கு ஒரே பகுதியில் குடிநீர் குழாயை இணைத்து நூதன மோசடியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு புகாரும் அளித்துள்ளனர்.

News September 2, 2025

விருதுநகர்: வங்கியில் வேலை அறிவிப்பு

image

கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!