News September 2, 2025

திருடுவதை வழக்கமாக்கியுள்ள PM மோடி: கார்கே

image

அடுத்த 6 மாதங்களுக்குள் மத்திய அரசு கவிழும் என்று காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஏழைகள், பெண்களுக்காக பணியாற்றும் அரசு விரைவில் அமையும் என்றும் அவர் கூறினார். பிஹாரில் நடைபெற்றுவரும் பேரணியில் பேசிய அவர், PM மோடி திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக விமர்சித்தார். வாக்குகளை திருடும் அவர், வங்கிகளை கொள்ளையடிப்பவர்களை காப்பதன் வாயிலாக பணத்தை திருடுகிறார் என்று கடுமையாக சாடினார்.

Similar News

News September 2, 2025

RECIPE: உடல் எடை குறைக்க உதவும் ‘கம்பு தோசை’

image

◆செரிமானம் மேம்பட, உடல் எடை குறைய, ரத்த சோகை பிரச்னை நீங்க கம்பு தோசை உண்ணலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
➥கம்பை நன்கு கழுவி தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும். அதே போல, உளுந்தம் பருப்பு, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
➥இவற்றை தோசை மாவு பதத்திற்கு அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். இதில் தோசை செய்தால் சுவையான கம்பு தோசை ரெடி. SHARE IT.

News September 2, 2025

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி: CM ஸ்டாலின்

image

இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளதாக ஜெர்மனியில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என குறிப்பிட்ட அவர், தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி எனவும் கூறியுள்ளார். முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர, தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்.

News September 2, 2025

BREAKING: தங்கம் விலை Record படைத்தது.. இதுவே முதல்முறை

image

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ₹160 உயர்ந்து ₹77,800-க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹9,725-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹137-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ₹78 ஆயிரத்தை நெருங்கியது இதுவே முதல்முறை.

error: Content is protected !!