News September 2, 2025
சித்த மருத்துவ ஆயுஷ் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுகை மாவட்ட சித்தா மருத்துவ ஆயுஷ் பிரிவில் சித்த மருத்துவ ஆலோசகர், ஹோமியோபதி மருத்துவ அலுவலர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://pudukkottai.nic.in இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட சித்தா அலுவலரிடம் வரும் 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
புதுக்கோட்டை: வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.05) மற்றும் நவ.06ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
News November 4, 2025
புதுக்கோட்டை: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 4, 2025
புதுகை: வாகனம் மோதி விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே குமரப்பன் வயல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதில் அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு தகவல் அளித்ததன் பெயரில் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து மீமிசல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


