News September 2, 2025
சேலம் நுண்ணறிவுப் பிரிவில் எஸ்.ஐ, ஏட்டுக்கள் 10 பேர் இடமாற்றம்!

சேலம் மாநகர காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவில் ஒரே நாளில் 10- க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்து மாநகர காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ பாஸ்கர், அழகாபுரத்திற்கும், அழகாபுரத்தில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ மணிகண்டன், பள்ளப்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 2, 2025
சேலம் ஆட்சியர் உத்தரவிட்டார்!

சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காசநோய் இல்லாத இந்தியா – 2025 என்ற நிலையை அடைவதற்காக சேலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவை காசநோய் உள்ளதா?, என பரிசோதிக்கப்படும் நபர்கள் மற்றும் உறுதி செய்யப்பட்ட காச நோயாளிகள் குறித்த விவரங்களை உடனடியாக சேலம் ஜிஹ.ஹெச்-யில் பதிவு செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
சேலம்: சொந்த ஊரில் வங்கி வேலை!

சேலம் மக்களே.., உங்கள் சொந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை வேண்டுமா? இந்தியாவின் வங்கிப் பணியாளர் தேர்வாணயம்(IBPS) கிராம வங்கி உதவியாளர் வேலைக்கு 7927 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க <
News September 2, 2025
சேலத்தில் தமிழ் வளர்ச்சித்துறையில் பயிலரங்கம்

சேலம் மாவட்டத்தில் நடப்பு 2025-2026ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் செப்.10, 11 ஆகிய 2 நாட்களுக்கு சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் 4ஆவது தளத்தில் உள்ள அனிச்சம் கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.