News April 10, 2024
மகனின் தேர்தல் தோல்விக்காக காத்திருக்கும் தந்தை

பாஜக சார்பில் போட்டியிடும் தனது மகன் அனில் ஆண்டனி தோல்வி அடைய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி விருப்பம் தெரிவித்துள்ளார். “காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் பாஜகவில் இணையும் செயல் தவறானது. காங்கிரஸ் தான் பாஜகவின் மதவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் கட்சி” என்றார். முன்னதாக கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக ஏ.கே.அந்தோனியின் மகன் போட்டியிடுகிறார்.
Similar News
News March 18, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 18, 2026
சினிமா ஸ்டார்கள் OTT தொடர்களில் நடிக்கக்கூடாது..

சில முன்னணி நடிகர்கள், இயக்குநர்களை நம்பித்தான் தியேட்டர் பிசினஸ் இருக்கிறது. அவர்கள் OTT படங்கள், சீரிஸ்களில் நடிப்பதால்/இயக்குவதால் திரையரங்கு பிசினஸ் பாதிக்கப்படுகிறது. இதனால், முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News March 18, 2026
காமெடி நடிகரை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ்

கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 55 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. அதில் காமெடி நடிகரும், இயக்குநருமான ரமேஷ் பிஷாரடி முதல்முறையாக காங்கிரஸ் வேட்பாளராக பாலக்காடு தொகுதியில் போட்டியிடவுள்ளது கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து தான் பிறந்த மண்ணில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, உலகிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற ‘கை’ சின்னத்தில் வேட்பாளராக களமிறங்குவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார்.


