News September 1, 2025
ராசி பலன்கள் (02.09.2025)

➤ மேஷம் – பொறுமை ➤ ரிஷபம் – நற்செயல் ➤ மிதுனம் – லாபம் ➤ கடகம் – ஆதரவு ➤ சிம்மம் – வரவு ➤ கன்னி – கவனம் ➤ துலாம் – செலவு ➤ விருச்சிகம் – புகழ் ➤ தனுசு – பாராட்டு ➤ மகரம் – மகிழ்ச்சி ➤ கும்பம் – அன்பு ➤ மீனம் – பக்தி.
Similar News
News September 2, 2025
ரயில்வே ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு

தங்களது சம்பள வங்கிக் கணக்கை SBI-ல் வைத்திருப்பவர்களுக்கு அசத்தலான அறிவிப்பை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. SBI Salary Account வைத்திருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கான விபத்து காப்பீடாக ₹1 கோடி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரயில்வே கையெழுத்திட்டுள்ளது. இதற்கு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இது முந்தைய காப்பீட்டை விட மிகவும் அதிகமாகும்.
News September 2, 2025
அந்த கண்ணு இருக்கே: மாளவிகா க்ளிக்ஸ்

அந்த சூரியனே அவள் மீது பட்டதும் வெட்கத்தில் சற்றே மறைந்துவிட்டது போல. ஆனால் அவளது பார்வையோ புத்தகத்தில் இருக்க, ரசிகர்களின் மனதோ அதில் எழுத்துக்களாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம், மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஸ் தான். இதனை மேலே பார்க்கலாம். கார்த்தி உடன் ‘சர்தார் 2’ படத்தில் நடித்துவரும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஹ்ருதய பூர்வம்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
News September 2, 2025
வி.கீப்பிங்கில் ஜிதேஷ் சர்மா ஜொலிப்பார்: ஆகாஷ் சோப்ரா

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், 2-வதாக ஜிதேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில், ஜிதேஷ் 4 – 7 பேட்டிங் வரிசையில் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில், ஜிதேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வி.கீப்பிங்கில் முதலிடத்துக்குச் செல்வார் என்று தான் நம்புவதாக கூறினார். உங்கள் கணிப்பு என்ன?