News September 1, 2025
1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB இலவசம்

சுதந்திர தின சலுகையாக அறிவிக்கப்பட்ட ‘BSNL Freedom Offer’ நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா(2 GB), 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். முன்னதாக, இந்த ஆஃபர் நேற்றுடன் (ஆக.31) நிறைவடைந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு உங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
வி.கீப்பிங்கில் ஜிதேஷ் சர்மா ஜொலிப்பார்: ஆகாஷ் சோப்ரா

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், 2-வதாக ஜிதேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில், ஜிதேஷ் 4 – 7 பேட்டிங் வரிசையில் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில், ஜிதேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வி.கீப்பிங்கில் முதலிடத்துக்குச் செல்வார் என்று தான் நம்புவதாக கூறினார். உங்கள் கணிப்பு என்ன?
News September 2, 2025
இயலாத நிலையிலும் என்னை ஏற்றவர் ஆர்த்தி: SK நெகிழ்ச்சி

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வெற்றி வாகை சூடிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தனது இயலாத சூழலில் தன்னுடைய மனைவியின் ஆதரவை பெருமைபட நினைவுகூர்ந்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த ‘மதராஸி’ பட நிகழ்வில் பேசிய அவர், என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல், சரியான சம்பளம் இல்லாதபோதும் ‘அவர் என்னைப் பார்த்து கொள்வார்’ என்று என்னுடைய மனைவி என்னை ஏற்றுக் கொண்டதாக கூறி நெகிழ்ந்தார்.
News September 2, 2025
செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள்

இலங்கை உள்நாட்டு போரின்போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எலும்புக்கூடுகள் செம்மணியில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜூன் முதல் ஆக.1 வரை 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்மணி சிந்துப்பாத்தி புதைகுழியில் நடைபெற்ற 3 கட்ட அகழாய்வில் இவை வெளிவந்துள்ளன. இதில் சிறுவர்கள், பெண்களே அதிகம் என்பது சோகத்தின் உச்சம்.