News September 1, 2025
சேலத்தில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,687 ஆக நிர்ணயம்!

செப்டம்பர் மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலை பட்டியலை இன்று (செப்.01) எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் 19 கிலோ எடைக் கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து ரூ.1,687 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், 5-வது மாதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.886.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News September 2, 2025
சேலம்: மேச்சேரி பத்ரகாளியம்மன் சிறப்பு பூஜை

சேலம்: மேச்சேரியில் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய பத்திரகாளியம்மனுக்கு இன்றைய அதிகாலை தரிசனமாக சிறப்பு அபிஷேக பூஜைகளும், மஞ்சள் நிற பட்டு உடுத்தி, திரிசூலம் கையில் ஏந்தி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் பூட்டப்பட்டது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
News September 2, 2025
சேலம் நுண்ணறிவுப் பிரிவில் எஸ்.ஐ, ஏட்டுக்கள் 10 பேர் இடமாற்றம்!

சேலம் மாநகர காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவில் ஒரே நாளில் 10- க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்து மாநகர காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ பாஸ்கர், அழகாபுரத்திற்கும், அழகாபுரத்தில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ மணிகண்டன், பள்ளப்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News September 2, 2025
செப்.03- ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

வரும் செப்.03- ல் சேலம் மாவட்டத்தில் மூலப்புதூர் ஆர்.கே.எஸ். திருமண மண்டபம், ஆட்டுக்காரன் வளவு கிருஷ்ணவேணி ராமலிங்க செட்டியார் திருமண மண்டபம், செங்கரடு சமுதாயக்கூடம், குள்ளம்பட்டி சமுதாயக்கூடம், ஆத்தூர், ராணிப்பேட்டை, அண்ணா கலையரங்கம், நாச்சிப்பாளையத்தில் காளியம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.