News April 10, 2024

எம்.ஜி.ஆரின் வலது கையாக இருந்தவர்

image

எம்.ஜி.ஆரின் வலது கையாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மறைந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என நடிகர் கமல்ஹாசன் புகழாரம் தெரிவித்துள்ளார். அரசியலிலும், சினிமாவிலும் மூத்தவராக இருந்தவர். தான் கொண்ட கொள்கையில் கடைசி வரை விலகாமல் பயணித்து மறைந்திருக்கிறார். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று கூறிய அவர், சினிமாவில் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் அதிகம் எனவும் தெரிவித்தார்.

Similar News

News April 24, 2025

தந்தையால் மகள் பாலியல் வன்கொடுமை: மறைத்த தாய்

image

மகளை தந்தை, உறவினர்கள் ரேப் செய்ததை மறைத்த தாய் மீது பதிவான போக்சோ வழக்கை டெல்லி HC ரத்து செய்தது. 10 வயது சிறுமி, பலமுறை 2023-ல் ரேப் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசிடம் முன்கூட்டி தகவல் தெரிவிக்காததை சுட்டிக்காட்டி, விசாரணை நீதிமன்றத்தால் தாய் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வழக்கை HC ரத்து செய்தது.

News April 24, 2025

ஜெயிலர் 2-வில் பகத் பாசில்..?

image

ஜெயிலர் 2 படம் இப்போதே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் ரஜினி மட்டுமே தற்போது வரை நடிப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், தற்போது ஒரு நியூஸ் படுவைரலாகி வருகிறது. படத்தில் வில்லனாக நடிக்க பகத் பாசில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. யோசிச்சி பாருங்க ரஜினி- சிவராஜ்குமார்- மோகன்லாலுக்கு எதிராக பகத்… எப்படி இருக்கும்?

News April 24, 2025

PoK-வில் 42 தீவிரவாத முகாம்கள்

image

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 42 தீவிரவாத முகாம்கள் உள்ளதை இந்திய ராணுவம் அடையாளம் கண்டுள்ளது. அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த, மேலிட உத்தரவுக்காக 130 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். மேலும், Hizbul Mujahideen தீவிரவாதிகள் 60 பேரும், Jaish-e-Mohammed மற்றும் Lashkar-e-Taiba தீவிரவாதிகள் 17 பேரும், தற்போது காஷ்மீரில் ஆக்டிவாக உள்ளதாகவும் உளவுத் தகவல் வந்துள்ளது.

error: Content is protected !!