News September 1, 2025

சற்றுமுன்: பிரபல இயக்குநர் காலமானார்

image

கன்னட திரையுலகில் பிரபல இயக்குநர் SS டேவிட்(55) திடீர் மாரடைப்பால் காலமானார். பெங்களூருவில் ஒரு மருந்து கடையில் நின்றிருந்த அவர், திடீரென மயக்கமடைந்து சரிந்தார். உடனடியாக ஹாஸ்பிடல் அழைத்து சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கன்னட திரையுலகில் இயக்குநராகவும் கதாசிரியராகவும் ஜொலித்த இவர் இயக்கிய படங்களில் ஹாய் பெங்களூர், தைரியா, ஜெய் ஹிந்த் ஆகியவை முக்கியமானவை. RIP

Similar News

News September 4, 2025

கார்களின் விலை எவ்வளவு குறையும்?

image

சில கார்களின் மீதான ஜிஎஸ்டி வரி 28% இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதன்படி Maruti swift ₹ 88ஆயிரமும், Tata Nexon ₹ 1.05லட்சமும், Maruti Baleno ₹ 85ஆயிரமும், Mahindra 3XO ₹ 95ஆயிரமும், Hyundai Venue ₹ 79ஆயிரமும், Tata Tiago ₹ 50ஆயிரமும், Kia Sonet ₹ 90ஆயிரமும், Tata Altroz ₹ 82ஆயிரமும், Hyundai i20 ₹ 75ஆயிரமும், Honda Amaze ₹ 85ஆயிரம் வரையும் விலை குறையலாம்.

News September 4, 2025

பாஜகவில் நயினாரின் மகனுக்கு முக்கிய பொறுப்பு

image

தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் அமைப்பாளராக நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர், மருத்துவம், கலை மற்றும் கலாச்சாரம், மீனவர் என 25 அணிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக, வாரிசு அரசியல் செய்வதாக பாஜக விமர்சித்து வரும் நிலையில், இந்த நியமனத்தால் நயினாரை திமுகவினர் சாடி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News September 4, 2025

இனி வீடு கட்டும் செலவு குறையும்

image

ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிதாக வீடு கட்டுவோர் பெரிதும் பயனடைவர் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சிமெண்ட், கிரானைட், மார்பிள், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி, 12% இருந்து 5% ஆகவும், 28% இருந்து 18% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கட்டுமான செலவில் 5% வரை குறையும். இதனால், மக்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும்.

error: Content is protected !!