News September 1, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற அழைப்புகள் மூலம் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளதாகவும், ஏற்கனவே பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
மயிலாடுதுறை: கோழிப்பண்ணை அமைக்க மானியம்

மயிலாடுதுறை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
இலவசம்;அறிவித்தார் மயிலாடுதுறை கலெக்டர்!

▶️தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 600 காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யபடவுள்ளனர் ▶️இதற்கு https://www.tnusrb.tn.gov.in/ இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம் ▶️செப்.08 முதல் இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வழங்கப்படும்▶️94990-55904 என்ற எண்ணிற்கு தகவல் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவிப்பு!SHARE
News September 6, 2025
மயிலாடுதுறை: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

மயிலாடுதுறை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04365-253022 அணுகலாம். SHARE பண்ணுங்க!