News September 1, 2025

வேலை போய்விடுமோ என்று பயந்தால்…

image

தினசரி பிரச்னைகளால் ஏற்படும் மனஅழுத்தம் போதாதென்று, வேலை போய்விடுமோ என்ற அச்சம் ஒருவரின் குணநலத்தை பெரிதும் பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலை போய்விடும் என்ற சூழ்நிலை நீண்டகால அளவில் ஒருவரின் மன சமநிலையை பாதிக்கிறது, முரண்டுபிடிக்கும் மனநிலையும் ஏற்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உங்கள் திறன்களை எப்போதும் அப்டேட்டில் வைத்திருங்கள். இந்த வேலை போனால், இன்னொரு வேலை கிடைக்கும்!

Similar News

News September 7, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தம்: செப்.10-ல் ஆலோசனை

image

இந்தாண்டு இறுதியில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்றது. இதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. இதனால் பாஜக, ECI உதவியுடன் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்., குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், செப்.10-ல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி, மாநில தேர்தல் ஆணையர்களுடன் ECI ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

News September 7, 2025

செப்டம்பர் 7: வரலாற்றில் இன்று

image

*1533 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் பிறந்தநாள்.
*1923 – பன்னாட்டுக் காவலகம் (Interpol) ஆரம்பிக்கப்பட்டது.
*1951 – நடிகர் மம்மூட்டி பிறந்தநாள்.
*1985 – நடிகை ராதிகா ஆப்தே பிறந்தநாள்.
*1999 – இலங்கை ராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600-க்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.

News September 7, 2025

தலைவர் பின்னால் இருந்தாலே போதும்: உபேந்திரா

image

‘கூலி’ படத்தில் கேமியோ ரோல்கள், குறைவான நேரமே திரையில் தோன்றியதாக விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், இதுகுறித்து உபேந்திராவிடம் கேட்டதற்கு, தான் ரஜினிகாந்தின் பின்னால் இருப்பதற்காகவே சென்றேன், அதுவே எனக்கு போதுமானது என்றார். முன்னதாக, ஆமிர் கானும் இதே பதிலையே கூறியிருந்தார். இருப்பினும், அனைவருக்கும் வலிமைமிக்க ரோல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!