News September 1, 2025

மெட்ராஸ் ஐஐடிக்கு சேர்க்கை கோவை மாணவர்கள் சாதனை.!

image

அனைவருக்கும் ஐஐடி-மெட்ராஸ்’ திட்டத்தின் கீழ், கோவை அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 8 பேர், ஐஐடி மெட்ராஸின் டேட்டா சயின்ஸ் இளங்கலை பட்டப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 560 மாணவர்கள் பங்கேற்ற இத்திட்டத்தில், இறுதியாக தேர்வான 8 மாணவர்களும் ஒட்டுமொத்த தமிழகத்திலும் கோவையில் இருந்து மட்டும் தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 2, 2025

BREAKING: கோவையில் வெடிகுண்டு மிரட்டல்!

image

கோவையின் மையத்தில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. அருகிலேயே கோவை எஸ்பி அலுவலகம், சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கலெக்டர் அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டதில் புரளி என தெரியவந்தது. இந்த நிலையில் இன்று 3ஆம் முறையாக வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

News September 2, 2025

கோவை மக்களே சுற்றுலா விருதுக்கு விண்ணப்பியுங்க!

image

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 29 அன்று, சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, தமிழக அரசு சார்பில் 17 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள், www.tntourisamwords.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News September 2, 2025

பரவும் அமீபா காய்ச்சல் கோவை சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

image

மூளையை தின்னும் அமீபா தொற்று தொடா்பாக கோவை மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்று தேங்கியிருக்கும் தண்ணீரின் மூலம் பரவும் என்பதால் குழந்தைகளை தேங்கி நிற்கும் தண்ணீா், முறையாக பராமரிக்காத குளங்களில் நீந்தவும், குளிக்கவும், விளையாடவும் பெற்றோா் அனுமதிக்க வேண்டாம். இதுவரை கோவையில் யாருக்கும் அமீபா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை கோவை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!