News April 10, 2024
அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும்

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த காங்., எம்பி திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்துள்ளார். ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அவர், அரசியல் உலகில் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர். எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத நேர்மையான மனிதர். மூத்த அரசியல்வாதியான அவரது இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Similar News
News July 8, 2025
திக்வேஷ் ரதிக்கு ஏறும் மவுசு

டெல்லி பிரீமியர் லீக் ஏலம் நேற்றைய முன்தினம் (ஜூலை 6) நடைபெற்றது. இதில், திக்வேஷ் ரதியை ₹38 லட்சத்துக்கு South Delhi Superstarz அணி வாங்கியுள்ளது. இது, அவர் IPL 2025 மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட தொகையைவிட அதிகமாகும். LSG அணியால் ₹30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர், கடந்த சீசனில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், திக்வேஷ் ரதிக்கு அடுத்தடுத்து வரவேற்பு அதிகரித்து வருகிறது.
News July 8, 2025
இருட்டிலும் இக்கட்டிலும் உள்ளது இபிஎஸ்தான்: துரைமுருகன்

இருட்டிலும் இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது இபிஎஸ்தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, இருளை அகற்றி தமிழகத்தில் ஒளி வீசச் செய்வதே தன்னுடைய தீராத ஆசை என்ற இபிஎஸ்-ன் கருத்துக்கே இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுகவின் பிரசாரப் பயணத்தின்போது திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை மக்களிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
News July 8, 2025
மசூத் அசாரை ஒப்படைக்க தயார்: பாக்., Ex அமைச்சர்

ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை நாடு கடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாக்., முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். விரிவான பேச்சுவார்த்தை நடத்தினால் நிச்சயம் இதெல்லாம் நடக்கும் என்றும், ஆனால் இதற்காக சரியான ஆதாரங்களை சமர்ப்பிப்பதும், எல்லை தாண்டி தீவிரவாதத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்க சாட்சியம் அளிக்க இந்தியாவில் இருந்து நபர்கள் வருவதும் முக்கியம் எனவும் கூறியுள்ளார்.