News September 1, 2025

மது பாட்டிலுக்கு ₹10 பிரச்னை.. டாஸ்மாக் புதிய உத்தரவு

image

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு <<17580578>>டாஸ்மாக் ஊழியர்கள்<<>> எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்றும், காலி பாட்டில்களை வைக்க கடையில் இடவசதி இல்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், திட்டத்தை முறையாக செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் குழு அமைத்துள்ளது. நிலவரத்தை ஆராய்ந்து 5 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News September 7, 2025

₹150 கோடி வசூலை தாண்டிய லோகா

image

கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் மொழிகளைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ₹150 கோடி வசூலைத் தாண்டி, மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸில் புது சாதனையை படைத்துள்ளது. இதற்கு படத்தின் திரைக்கதை மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பதே காரணம். இதனால் நாளுக்கு நாள் தியேட்டர்களை நோக்கிச் செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

News September 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 451 ▶குறள்: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். ▶ பொருள்: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

News September 7, 2025

USA உடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர்

image

இந்தியாவுக்கு, USA 50% வரி விதித்ததில் இருந்தே இரு நாடுகளிடையே வர்த்தக ரீதியிலான கருத்துகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், USA உடனான நல்லுறவுக்கு PM மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக EAM ஜெய்சங்கர் கூறியுள்ளார். ட்ரம்ப் விஷயத்தில், மோடி எப்போதும் மிகச்சிறந்த தனிப்பட்ட நல்லுறவை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன் என்று டிரம்ப் பேசியிருந்தார்.

error: Content is protected !!