News September 1, 2025

99,09,632 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம்

image

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 4, 2025

தூய்மை பணியாளரை பாராட்டிய துணை முதல்வர்

image

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் கிளாரா திருவான்மியூரில் பணியின் போது, கீழே கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்திருக்கிறார்.உடனே அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்கச் சொன்னார். அவரின் நேர்மையை அறிந்த முதல்வர் வாழ்த்து தெரிவித்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கிளாரா குடும்பத்தை நேரில் வரவழைத்து பாராட்டி, நிதியுதவி அளித்தார்.

News September 4, 2025

சென்னைக்கு மழை வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் வரும் 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வரும் 8ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது

News September 4, 2025

சென்னையில் சிங்கப்பூர் திறன் மேம்பாட்டு மையம்

image

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் உடனான சந்திப்புக்கு, பிறகு பிரதமர் மோடி பேசுகையில், சென்னையில் திறன் மேம்பாட்டுக்கான தேசிய சிறப்பு மையத்தை அமைப்பதில் சிங்கப்பூர் ஒத்துழைப்பு அளிக்கும். விண்வெளி அறிவியல் துறை ஒத்துழைப்பில் சிங்கப்பூர் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்க்கிறது. தற்போதைய பொருளாதார சூழலில் இந்தியா-சிங்கப்பூர் உறவு மிகவும் முக்கியமானது என்றார்.

error: Content is protected !!