News September 1, 2025

கரூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

▶️கரூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.▶️ வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. ▶️உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். ▶️இதை SHARE பண்ணுங்க.

Similar News

News September 7, 2025

கருப்பணசாமி கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ தரிசனம்!

image

கரூர், மண்மங்கலம் வட்டம், பெரிய வடுகபட்டியில் உள்ள அருள்மிகு கருப்பணசாமி கோவிலில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்துகொண்டார். இதில் கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். குடமுழுக்கு விழா முடிந்ததும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

News September 7, 2025

மாயனூரில் 6மி.மீ மழைப்பதிவு

image

கரூர் மாவட்டம், மாயனூர் பகுதியில் நேற்று சுமார் 3மணி நேரம் (6மி.மீ) கன மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் அங்கு குளிர்ந்த ஈரப்பதம் நிலவியது. தற்போது இந்த மழையினால் அப்பகுதியில் நல்ல குளிர்ச்சியான சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 7, 2025

இன்று மனுக்களை பெறும் எம்எல்ஏ செந்தில்பாலாஜி!

image

கரூர் மாவட்டதில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி இன்று (07.09.2025) காலை10.30 மணியளவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கிரையம் பெற்றவர்களுக்கு தனிப்பட்டா வழங்க மனுக்கள் பெறும் முகாமினை தொடங்கி வைத்து மனுக்களை பெற உள்ளார்கள் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தற்பொழுது அறிவித்துள்ளார்.

error: Content is protected !!