News September 1, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 3,789 நபர்கள் பயன்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நலங்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் வட்டத்திற்கு 1 முகாம் வீதம் மாவட்டத்திலுள்ள நான்கு வட்டத்திற்கும் நான்கு முகாம்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. நடைபெற்ற நலம்காக்கும் ஸ்டாலின் முகாமில் இதுவரை 3,789 நபர்கள் கலந்து கொண்டு முகமை பயன்படுத்தி உள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Similar News

News September 4, 2025

பெரம்பலூர்: POLICE ஆக ஆசையா?

image

பெரம்பலூர் மக்களே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து வரும் செப்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News September 4, 2025

பெரம்பலூரில் பயங்கர தீ விபத்து

image

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் ஆயில் மில்லில் இன்று (செப்.04) காலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதாரமானது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் மற்றும் மின்சாரத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தீவிபத்தால், அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

News September 4, 2025

பெரம்பலூர்: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

image

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் பெரம்பலூர் ஆட்சியர் ந.மிருனாளினி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!