News September 1, 2025
தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்

தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. எம்எல்ஏ ஆர். அருள், தலைமை நிலையச் செயலர் அன்பழகன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் 9 பேரும் கூடி அன்புமணி மீதுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காதது குறித்து விவாதித்து, அறிக்கை தயார் செய்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 4, 2025
என்ன தகுதிகள் இருக்க வேண்டும் 2/2

▶️ பெற்றோரில் ஒருவர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ஆண்டு வருமானம் 1,20,000 க்குள் இருக்க வேண்டும்.
▶️இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
▶️ஒரே குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
*இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News September 4, 2025
விழுப்புரம்: குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்கள் ஊரில் நடைபெற்று வரும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் விண்ணப்பிக்காலாம். ஷேர் IT <<17608117>>தொடர்ச்சி<<>>
News September 4, 2025
BREAKING: விழுப்புரம் அருகே விபத்து.. 10 பேர் காயம்

விழுப்புரம் அருகே இன்று காலை 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெஞ்சிசாலையில் விதை பண்ணை என்ற இடத்தில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் மற்றும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.