News September 1, 2025
10 மற்றும் +2 மாணவர்களுக்கு கற்றல் கையட்டினை வெளியிட்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் மாணவ-மாணவியர்களுக்கான “கற்றல் கையேட்டினை” தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று வழங்கினார்கள்.
Similar News
News September 6, 2025
தஞ்சையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்

தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட கழக கட்டிடத்தில், மாவட்ட கழக அவைத்தலைவர் க.நசீர்முகமது தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News September 6, 2025
தஞ்சை: ITI, டிப்ளமோ முடித்திருக்கிறீர்களா..சூப்பர் வேலை!

தஞ்சை மக்களே, திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <
News September 6, 2025
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் இன்று (செப் 6) காவலர் தினத்தை முன்னிட்டு, கண்கள் இமைப்பதில்லை, ஓய்வில் உறங்குவதுமில்லை, ஓய்வு என்பது உடலுக்குமில்லை, இவ்வாறு இல்லை என்பதே ஏராளம் இருந்தாலும், முடியாது என்பது எம் அகராதியில் இல்லை என சவால்களை எல்லாம் சாதனைகளாக்கும் தமிழ்நாடு காவலர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காவலர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.