News April 9, 2024

பிரதமர் மோடியின் நாளைய திட்டம்

image

இன்று இரவு சென்னை ராஜ் பவனில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை 9 மணிக்கு வேலூருக்கு புறப்படுகிறார். 10.30 மணியளவில் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் கோவை செல்லும் மோடி, 1.45 மணிக்கு மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து, 3 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து நாக்பூர் புறப்படுகிறார்.

Similar News

News March 17, 2026

தி.மலை: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

திருவண்ணாமலை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

FLASH: காருடன் எரிந்த நிலையில் கிடந்த 4 சடலங்கள்!

image

நெல்லை, திசையன்விளை பகுதியில் உள்ள பனங்காட்டில் சொகுசு கார் ஒன்றில் எரிந்த நிலையில், 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையில் இறங்கியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

News March 17, 2026

தவெகவுடன் கூட்டணியா? நயினார் மழுப்பல்

image

அதிமுக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக வெளியாகும் தகவலே தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். இதனை தவெகவும், EPS-ம் மறுத்துள்ள நிலையில், இதுபற்றி தனக்கு தெரியாது என நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் NDA உடன் மறைமுக பேச்சுவார்த்தையில் இப்போதும் தவெக உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதுபற்றி விஜய் கூறினால் மட்டுமே தெளிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!