News September 1, 2025
Tech: கூகுள் Storage-ஐ காலி செய்ய சிம்பிள் Tips..

உங்கள் ஃபோனில் கூகுள் Storage Full ஆகிவிட்டால், Extra Storage-காக பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த சீக்ரெட் டிரிக்ஸை செய்தாலே Storage Clear ஆகும். Google Drive(Desktop)→Settings→manage apps→Hidden App Data→Delete செய்யுங்கள். 2வது வழி, Google Photos→Settings→Backup Quality→Storage Saver→Recover Storage என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்க. இப்படி செய்தாலே Storage Clear ஆகும். SHARE.
Similar News
News September 4, 2025
சற்றுமுன்: கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தவெக?

NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி நேற்று அறிவித்தார். இதனையடுத்து, EPS மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், OPS உடன் இணைந்து, விஜய்யின் தவெகவுடன் டிடிவி கூட்டணி வைக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்நிலையில், அவரின் கூட்டணி விலகல் செய்தியை தவெகவினர் பகிர்ந்து வருகின்றனர். இது டிடிவியை தவெக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் சமிக்ஞை போல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 4, 2025
மூலிகை: எடை குறைப்புக்கு உதவும் திப்பிலி!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி,
➤திப்பிலியின் பாக்டீரியா எதிர்ப்பு, வலி நிவாரணி பண்புகள் பல்வலி & வாய் பிரச்னைகளுக்கு நிவாரணியாக உள்ளது.
➤திப்பிலியில் பைபர் உள்ளதால், கொழுப்பைக் குறைக்க உதவும்.
➤திப்பிலி பழங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய் தூக்கமின்மை பிரச்னையை விரட்ட உதவுகிறது.
➤திப்பிலியின் வேரிலிருந்து கிடைக்கும் சாறு, சிறுநீரக பிரச்னைக்கு சிறந்த மருந்தாகும். SHARE IT.
News September 4, 2025
நாய்களுடனான உறவை சிதைக்க கூடாது: மிஷ்கின்

தெரு நாய்கள் விவகாரத்தில் 2 பக்கத்தின் பாதிப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். உயிர்வதை கொடுமையானது, அதே சமயம் நாய்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு, உணர்வு ரீதியான என்றும், அதை சிதைத்துவிடாமல் திட்டமிடல் இருந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.