News September 1, 2025

MP சசிகாந்த் செந்திலிடம் பேசிய ராகுல் காந்தி!

image

SSA கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி 4-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும், MP சசிகாந்த் செந்திலிடம் ராகுல் காந்தி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். உடல்நிலை மோசமடைந்ததால் திருவள்ளூர் GH-ல் இருந்து சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலுக்கு நேற்று மாற்றப்பட்டார். அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் நிலையில், செல்வப்பெருந்தகை, துரை வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

Similar News

News September 4, 2025

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

கடந்த 9 நாளாக தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, 10-வது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹78,360-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹9,795-க்கும் விற்பனையாகிறது. கடந்த 9 நாள்களில் தங்கம் விலை ₹4,000 அதிகரித்த நிலையில், இன்று வெறும் ₹80 மட்டுமே குறைந்துள்ளது

News September 4, 2025

போன் கேலரியில் ஆதார் Save பண்றீங்களா.. உஷார்!

image

ஆதார் & பான் கார்டு போட்டோஸை Phone gallery, சேமித்து வைக்க வேண்டாம் என புகழ்பெற்ற சைபர் பாதுகாப்பு நிபுணர் ரக்ஷித் டாண்டன் தெரிவித்துள்ளார். Hack Proof உச்சி மாநாட்டில் பேசும் போது, இதுபோன்ற தனிப்பட்ட தகவல்களை Digilocker-ல் சேமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார். பல App-களும் Install பண்ணும் போது, Gallery access-ஐ பெறுவதால், அது பாதுகாப்பானது இல்லை எனவும் அவர் தெரிவிக்கிறார். SHARE IT.

News September 4, 2025

ஜிஎஸ்டி வரி குறைப்பால் என்ன நடக்கும் தெரியுமா?

image

GST வரி குறைப்பால் அரசுக்கு ₹93 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், ஆடம்பர பொருட்களை 40%-க்குள் கொண்டு வருவதால் ₹45 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதன் விளைவாக, ₹48 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும், வரி குறைப்பால் மிச்சமாகும் பணத்தை மக்கள் செலவிட விரும்புவார்கள். இது அப்பணத்தை மீண்டும் பொருளாதாரத்திற்கு கொண்டுவரும். வரிகள் குறைக்கப்பட்டாலும், அரசுக்கு அதிக இழப்பு ஏற்படாது.

error: Content is protected !!