News April 9, 2024

டி20 உலகக் கோப்பை அணியில் ரிஷப் பந்த்?

image

கார் விபத்தில் படுகாயம் அடைந்து ஒன்றரை ஆண்டுகளாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ரிஷப் பந்த், தற்போது ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெல்லி அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்துவரும் அவர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், டி20 WCக்கான இந்திய அணியில் அவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக Cricbuzz தெரிவித்துள்ளது. அவர் அணிக்கு திரும்பினால் அணி மேலும் வலுவடையும் என கூறப்படுகிறது.

Similar News

News March 20, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 638
▶குறள்:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
▶பொருள்: சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

News March 20, 2026

தண்ணீருக்கு போர் போட கிடைத்த ஃப்ரீ கேஸ் கனெக்‌ஷன்!

image

கிணறு வெட்ட போய், பூதம் கிளம்பியது என்பார்கள். அப்படித்தான் இவர்களுக்கு கேஸ் கனெக்‌ஷன் கிடைத்துள்ளது. ஆலப்புழாவை சேர்ந்த ரத்தினம்மா, கடந்த 2011-ல் தண்ணீருக்காக Bore போட்டுள்ளார். தண்ணீர் வராததால், குழாயை மூடும் போது மீத்தேன் வாயு இருப்பது தெரியவந்தது. அந்த கேஸ் கனெக்‌ஷனை கிச்சனுக்கு லைன் கொடுத்து, 10 ஆண்டுகளாக ரத்தினம்மா குடும்பம் சமைத்து வருகிறது. இதனால், ஆண்டுக்கு ₹10,000 சேமிக்கிறார்களாம்.

News March 20, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!