News September 1, 2025
நாகை: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நாகை மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால், வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News September 9, 2025
நாகை: ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

நாகப்பட்டினம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ஆட்டோக்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி சென்றால் கூடுதலாக ஏற்றும் பயணி ஒருவருக்கு ரூ1000 வீதம் ஆட்டோ ஓட்டுநர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இது போல் உரிய புகை சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என நாகை வட்டார போக்குவரத்து அலுவலகம் எச்சரித்து உள்ளது.
News September 9, 2025
நாகை: தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உளுந்து, பருத்தி மற்றும் நெற்பயிர்களுக்கு மாற்றுப் பயிராக தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் . குறிப்பாக மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் மல்லிகைப்பூ உள்ளிட்ட பூச்செடிகளை விவசாயிகள் பெற்று சாகுபடியில் ஈடுபடும் போது நிறைந்த லாபம் அடையலாம் என நாகை மாவட்ட வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 9, 2025
நாகை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

நாகை மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!