News September 1, 2025

கள்ளக்குறிச்சி: இன்று முதல் உயர்கிறது

image

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சுங்க சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கவரி செப்டம்பர் 1 நள்ளிரவு 12 மணி அளவில் இருந்து அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகள் 190 தொடங்கி அதற்கு மேல் வரையிலான சுங்கவரி விடுப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

Similar News

News September 5, 2025

உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணி

image

கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையம் அருகில் உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 5, 2025

கள்ளக்குறிச்சி பெண்களே இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9094055559) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 5, 2025

கள்ளக்குறிச்சி இளைஞனுக்கு திருவாரூரில் கல்யாணம்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் அறிவித்திருந்த அறைக்கூவலின் பெயரில் இன்று செப்டம்பர் 5 கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவருக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜ் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

error: Content is protected !!