News September 1, 2025
மதுரை மக்களே உங்க வீட்டில் சுபநிகழ்வா??

மதுரை மக்களே உங்கள் வீட்டின் சுபநிகழ்வுகளுக்கு மண்டபத்திற்கு ஆகும் செலவை நினைத்து கவலையா இருக்கீங்களா?? உங்கள் செலவை குறைக்க ஒரு வழி உள்ளது. மதுரை மாநகராட்சியின் சார்பாக 40க்கும் மேற்பட்ட சமுதாயக்கூடங்கள் உள்ளது. இதில் உங்கள் வசதிக்கு ஏற்ப மண்டபங்களை தேர்வு செய்து இங்கு<
Similar News
News September 4, 2025
மதுரையில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

மதுரையில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வி.எச்.என். மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் செல்வன் அற்புதராஜ், ஓ.சி.பி.எம். மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் கண்ணன், புனித சார்லஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜான்சி பாலின்மேரி, வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை அழகேஸ்வரி உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
News September 3, 2025
மதுரை மக்களே உஷார்! காவல்துறை எச்சரிக்கை!

மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை: AI குரல் குளோனிங் மோசடி குறித்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மோசடிகள் நெருங்கியவர்களின் குரலை AI மூலம் பின்பற்றி அவசர நிலை உருவாக்கி பணம் கேட்கலாம். உறவினர்களிடம் நேரடியாக உறுதி செய்ய வேண்டும். தொலைபேசி குரல் மட்டும் நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம். புகார் அளிக்க 1930 அழையுங்கள் அல்லது cybercrime.gov.in செல்லவும். *ஷேர் பண்ணுங்க
News September 3, 2025
மதுரை ஆண் கருத்தடை சிகிச்சை முகாம்

இந்திய குடும்ப நலச் சங்கம் மற்றும் மாவட்ட குடும்ப நலத்துறை இணைந்து நடத்தும், ஆண்கள் கருத்தடை சிகிச்சை முகாம் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை எல்லிஸ் நகரில் அமைந்துள்ள FPAI மருத்துவமனையில் நடைபெற இருக்கிறது, இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், கருத்தடை சிகிச்சை மேற்கொள்வோர் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை, மேலும் விவரங்களுக்கு 0452 2601905 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.