News September 1, 2025
விழுப்புரம்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… இன்று முதல் அமல்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, கார் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை பயணிப்பதற்கான கட்டணம் மாற்றம் இல்லை. இரண்டு முறை பயணிப்பதற்கான கட்டணம் ரூ.5 அதிகரித்துள்ளது. அதேபோல, மாதாந்திர கட்டணம் ரூ.70 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் ஒரு புதிய சுமையாக மாறியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 4, 2025
டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரத்தை சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடா், பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக பொருளாதார, கல்வி நிலை, வாழ்க்கைத்தரத்தை உயா்த்துவதற்கு பங்காற்றியவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா்,பழங்குடியினா் நல அலுவலத்தில் அக்.10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
News September 4, 2025
விழுப்புரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News September 3, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.