News September 1, 2025

தொழில்நுட்ப பணிகள் தேர்வு 1,027 பேர் ‘ஆப்சென்ட்’

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் கொள்குறி வகை தேர்வு நேற்று(ஆக.31) நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வு எழுதுவதற்கு 3 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. காலை 9:30 மணி முதல் பகல் 12:30 வரை நடந்த தேர்வை 1,973 பேர் எழுதினர். 1,027 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Similar News

News September 5, 2025

விழுப்புரத்தில் பள்ளி மாணவி சாதனை ஆட்சியர் பாராட்டு

image

விழுப்புரம் ஜெயந்திரா சரஸ்வதி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி குனவதி, கைப்பந்து போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கி, தேசிய அளவிலும் பங்கேற்றுள்ளார். இவரது திறமையை பாராட்டி பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் பரிசளித்தனர். மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

News September 5, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறுவோர்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்:
▶️ வழுதாவூர், திருமுருகன்
▶️ ரெட்டணை. பாலசுந்தரம்
▶️ மேல் ஒலக்கூர், இளங்கோவன்
▶️ வளவனுார்,முருகன்
▶️ கப்பை, அருமைசெல்வம்
▶️ செ.பூதுார், விஜயலதா
▶️ மேல்நெமிலி, லட்சுமி நாராயணசாமி
▶️ பக்கிரிதக்கா, ராஜலட்சுமி
▶️ ரெட்டணை, மாசிலாமணி
▶️ ராஜாம்புலியூர், நமச்சிவாயம்
மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஆசிரியர்களின் பெயர்களை SHARE பண்ணுங்க

News September 5, 2025

விழுப்புரம் பெண்கள் இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9150058446) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணு

error: Content is protected !!