News September 1, 2025
புதுவையில் நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

சென்னை, வியாசர்பாடி கார்த்திக், தொழிலாளி. வேளாங்கண்ணியில் கொடியேற்றம் முடிந்து, நண்பர்களுடன் புதுவைக்கு வந்தார். அங்கிருந்து ஆரோவில் குயிலாப்பாளையம் தனியார் கெஸ்ட் அவுசில், 9 பேரும் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் அங்குள்ள நீச்சல் குளத்தில் நண்பர்கள் அனைவரும் குளித்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கார்த்திக் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
Similar News
News September 5, 2025
புதுச்சேரி: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
புதுச்சேரியில் நாளை பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நாளை 6ஆம் தேதி சனிக்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது.
News September 5, 2025
துணை தாசில்தார் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்விற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த 31ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகளைப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது.