News September 1, 2025
நாகை: ஓட்டுநர் பணியிடங்கள் அறிவிப்பு – கலெக்டர்

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தலைஞாயிறு, வேதாரண்யம், நாகை, கீழ்வேளூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்கள் இனசூழற்சி அடிப்படையில் நிரப்பபட உள்ளன. விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News September 5, 2025
நாகை: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்காணல்!

நாகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான நேர்காணல் முகாம் நாளை 6ஆம் தேதி காலை நடக்கிறது. ஒட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம் உதவியாளர் பணியிடத்திற்கு பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம்,ஏ என்எம் படித்த 30 வயதுக்குட்பட்ட ஆண் பெண் விண்ணப்பிக்கலாம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE பண்ணுங்க.
News September 5, 2025
நாகை: 19வது நாளாக காத்திருப்பு போராட்டம்

நாகப்பட்டினம் அரசு பேருந்து பணிமனை முன்பு நாகை மண்டல ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக 19 ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பாக்கியை திரும்பி செலுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
News September 5, 2025
நாகை: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

நாகை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!