News September 1, 2025
குமரி வேளாண்துறையில் 1165 மனுக்களில் 479க்கு உடனடித் தீர்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குமரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் ஜூலை15 முதல் நடந்து வருகிறது. நடந்து முடிந்த முகாம்களில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 1165 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 479 மனுக்களுக்கு உடனடி தீர்வு நடவடிக்கையாக மண் பரிசோதனை அட்டை, வேளாண் காப்பீடு அட்டை, வேளாண் இயந்திரங்கள், வேளாண் இடு பொருள்கள் ஆகியன வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
கன்னியாகுமரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

கன்னியாகுமரி, உங்களுடன் ஸ்டாலின் முகாம் (செப்டம்பர் 4) 2025 வியாழக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் 17,21 மற்றும் குடித்துறை நகர் வார்டுகள் 3,4,5,6 உட்பட பல பகுதிகளில் நடைபெறும் இம்முகாமில் குடிமக்களின் குறைகள் கேட்கப்பட்டு உடனடி தீர்வு வழங்கப்படும். அரசு அதிகாரிகள் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.
News September 3, 2025
குமரியில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நல்ல ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோமதி,தியாகராஜன், ஜெசி ஜெனட், ஹெலன் மேரி,சுகந்தி,மேரி அழகம்மாள்,சுரேந்திரன்,ஸ்ரீதேவி,பிரேமா ராஜ்,லீமா ரோஸ்,சரிகா, காட்வின் ஆகிய 12 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *ஷேர் பண்ணுங்க
News September 3, 2025
நாகர்கோவில் – கோட்டயம் ரயிலுக்கு ஓச்சிறையில் நிறுத்தம்

நாகர்கோவில் இருந்து கோட்டயம் செல்லும் கடைகளுக்கு ஒச்சிறையில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. இன்று முதல் இந்த ரெயில் ஓச்சிறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 6.07 மணிக்கு ஓச்சிறை வரும் ரயில் 6.08 மணிக்கு ஓச்சிடையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே தெரிவித்துள்ளது.