News September 1, 2025

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

image

மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹51.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,738-க்கு விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Similar News

News September 4, 2025

செப்டம்பர் 4: வரலாற்றில் இன்று

image

*1825 – தாதாபாய் நெளரோஜி பிறந்தநாள்.
*1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், தான் கண்டுபிடித்த படம்பிடிக்கும் கருவிக்கு ‘ஈஸ்ட்மேன் கோடாக்’ என்பதை வர்த்தகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
*1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.
*1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2007 – தமிழ் திரைப்பட நடிகை குமாரி ருக்மணி நினைவுநாள்.

News September 4, 2025

பைக், ஆட்டோ, கார்களின் விலை குறைகிறது

image

GST சீர்திருத்தங்களின் அடிப்படையில் மோட்டார் வாகனங்களுக்கான வரம்பு 28%-லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி,
*1,500 cc-க்கு மிகாத டீசல் கார்கள்.
*ஆம்புலன்ஸ்
*ஆட்டோ உள்பட 3 சக்கர வாகனங்கள்.
*1.200 cc-க்கு குறையாத Hybrids.
*மோட்டார் வாகனங்களின் உதிரி பாகங்கள்.
*வாகனங்களின் பாகங்கள்.
*350 cc-க்கு குறைவான பைக்குகள்.

News September 4, 2025

GST குறைப்புக்கு பிஹார் தேர்தல் காரணமா? ப.சிதம்பரம்

image

தற்போது அறிவித்துள்ள GST சீர்திருத்தங்கள் 8 ஆண்டுகள் தாமதமானது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட X பதிவில், இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். நாட்டின் மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் வீட்டுக்கடனா? குறைந்துவரும் வீட்டு சேமிப்பா? பிஹார் தேர்தலா? டிரம்ப், அவரது வரியா? அல்லது இவை அனைத்துமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!