News April 9, 2024
கரூர்: சீறி பாய்ந்த காளைகள்

தோகைமலை அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழாவிற்கு பல மாவட்டங்களில் இருந்து 14 மந்தையர்கள் கலந்து கொண்டனர். எல்லை கோட்டை நோக்கி சுமார் 200 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில், திருச்சி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கோலக்கம்பிலி நாயக்கர் மந்தை சின்னக்காரி குழு மாடு முதலாவதாக ஓடி வந்து முதல் இடத்தை பிடித்தது. இதற்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.
Similar News
News February 8, 2026
கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
கரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE பண்ணுங்க)
News February 8, 2026
தென்னிலை: தலைவலியால் நேர்ந்த சோகம்

தென்னிலை பகுதியைச் சேர்ந்தவர் முருகாயி. இவருக்கு நீண்ட நாளாக தலைவலி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மன விரக்தியில் விஷம் உட்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


