News September 1, 2025
BJP தலைவர்களிடம் ஆதரவு கோருவேன்: சுதர்சன் ரெட்டி

தனது வேட்புமனுவை தகுதியின் அடிப்படையில் அனைத்து லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் பரிசீலிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். INDIA கூட்டணியின் து.ஜனாதிபதி வேட்பாளரான அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், BJP உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால், அவர்களிடம் ஆதரவு கோர தயாராக உள்ளதாக கூறியுள்ளார். அரசியல் மாண்பு என்றாலும், சுதர்சனின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News September 4, 2025
கூட்டணி மாற்றம்.. கைகோர்க்க போகும் 4 தலைவர்கள்?

EPS-வுடன் செங்கோட்டையன் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், NDA கூட்டணியில் இருந்து OPS-ஐ தொடர்ந்து, டிடிவியும் விலகியுள்ளார். குறிப்பாக, நாளை காலை 9.15 மணிக்கு அதிமுக தொண்டர்களின் மனநிலை குறித்து மனம் திறந்து பேசும் செங்கோட்டையன், சசிகலா, OPS, டிடிவியை சந்திக்கவும் இருக்கிறாராம். அவரின் நாளைய பேச்சுக்கு பின், தமிழக அரசியலில் மிகப்பெரிய கூட்டணி மாற்றம் நிகழும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 4, 2025
Health: டீயுடன் சேர்த்து சிகரெட் பிடிக்கிறீங்களா? ஜாக்கிரதை

புகைப்பிடிப்பது நமது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும், அதனை தேநீருடன் சேர்த்து பிடிப்பதால் நோய்களின் வீரியம் மேலும் அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்த டீ + சிகரெட் காம்போவால் உணவுக்குழாய் கேன்சர், நுரையீரல் கேன்சர், தொண்டை கேன்சர், இதய நோய், கருவுறாமை / ஆண்மைக்குறைவு, அல்சர், மறதி, பக்கவாதம் ஆகியவை எளிதில் வரும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Avoid பண்ணுங்க மக்களே. SHARE.
News September 4, 2025
நாளை முதல் ரீசார்ஜ் ஆஃபர்களை அள்ளித்தரும் JIO!

9-வது ஆண்டை நிறைவு செய்யும் வேளையில், ஜியோ பல சலுகைகளை அறிவித்துள்ளது.
*அதன்படி, செப். 5- 7 வரை 5G ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு 5G டேட்டா முழுவதும் இலவசம்.
*4G ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ₹39 Data add-on உடன் அன்லிமிடெட் 4G வழங்கப்படுகிறது.
*அதே போல, செப் 5- அக். 5 வரைக்கான, ₹349 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அன்லிமிடெட் 5G வழங்கப்படுகிறது. இத்துடன், ஜியோஹாட்ஸ்டார் 1 மாத இலவச சந்தாவும் அளிக்கப்படுகிறது.