News September 1, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 445 ▶குறள்: சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். ▶ பொருள்: கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும்.

Similar News

News September 5, 2025

நடிப்பிற்கு Bye-Bye சொல்லும் நடிகை?

image

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், ரஜித் இப்ரான் எனும் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார். இன்னும் இரு மாதங்களில் துபாயில் நடைபெறவிருக்கும் அத்திருமணத்திற்கு திரையுலகினர் யாரையும் அழைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என கூறப்படுகிறது. அத்துடன் இனி படங்களில் நடிப்பதற்கும் End Card போட முடிவெடுத்திருக்கிறார் என தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.

News September 5, 2025

NIA வசம் செல்லுமா தர்மஸ்தலா வழக்கு?

image

தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக எழுந்த புகார் நாட்டையே பதற வைத்தது. இந்த வழக்கை NIA விசாரிக்க வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த ‘சனாதன சாந்த் நியோகா’ என்ற அமைப்பு அமித்ஷாவிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளது. வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கும் எனவும் அவர்களிடம் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

News September 5, 2025

வாழ்க்கையை ஒளிர்விக்கும் விளக்குகள் – நம் ஆசிரியர்கள்!

image

ஆசிரியர்கள் நம் வாழ்வில் ஒளியை நிரப்பும் விளக்குகள். அவர்கள் நமக்கு அறிவையும், நல்ல பழக்கங்களையும் கற்றுத்தருகிறார்கள். தவறு செய்தால் திருத்தி, வெற்றிக்கு வழிகாட்டி, இரண்டாம் பெற்றோர் போல அன்பும் அக்கறையும் காட்டுகிறார்கள். இன்று ஆசிரியர் தினத்தில், அவர்களின் உழைப்புக்கும் தியாகத்துக்கும் மனமார்ந்த நன்றியும் மரியாதையும் செலுத்துவோம். உங்களின் வாழ்வை செதுக்கிய சிறந்த ஆசிரியர் யார்? SHARE IT.

error: Content is protected !!