News September 1, 2025
தமிழகம் வருகிறார் ஜனாதிபதி முர்மு

3 நாள்கள் பயணமாக ஜனாதிபதி திரெளபதி முர்மு கர்நாடகா மற்றும் தமிழகம் வருகிறார். இன்று மைசூரில் நடைபெறும் AIISH வைர விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து நாளை (செப்.2) தமிழகம் வரும் அவர், சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன நாளில் பங்கேற்கிறார். செப்.3-ல் திருவாரூர் மத்திய பல்கலையின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு டெல்லி திரும்புகிறார்.
Similar News
News September 1, 2025
சீன பயணம் மூலம் டிரம்புக்கு மோடி சொல்லும் பாடம்!

ரஷ்யா உடனான பகைக்கு இந்தியாவை பகடைக்காயாக டிரம்ப் பயன்படுத்த முயல்வதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதித்து மிரட்டல் விடுத்துள்ளது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், சீனா, ரஷ்யாவுடன் PM மோடியின் நெருக்கம், USA ஆதரிக்கும் பாக்., பிரதமரை புறக்கணிப்பு என டிரம்புக்கு மறைமுக மிரட்டலை மோடி விடுத்துள்ளதாக பேசப்படுகிறது.
News September 1, 2025
மூலிகை: உடல் கொழுப்பை குறைக்கும் செம்பருத்திப் பூ!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி,
➤செம்பருத்தி பூவை பொடியாக்கி, நீரில் கொதிக்க வைத்து குடித்தால், உடற்சோர்வு நீங்கும்.
➤பூவை காய வைத்து பொடியாக்கி, பாலில் கலந்து குடிப்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
➤வாய்புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் செம்பருத்தி பூவை சாப்பிடுவது புண்களை ஆற்றும். ➤செம்பருத்தி பூவின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து அருந்தினால், உடல் கொழுப்பு குறையும். SHARE IT.
News September 1, 2025
1,543 பணியிடங்கள்.. இப்பவே அப்ளை பண்ணுங்க..

பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. BE / B.Tech / B.Sc (Eng.) பட்டம் பெற்ற 29 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கள பொறியாளருக்கு மாதம் ₹30,000-₹1,20,000 வரை சம்பளமும், கள மேற்பார்வையாளர்களுக்கு ₹23,000 – ₹1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும். செப்., 17-க்குள் https://www.powergrid.in/en/job-opportunities -ல் விண்ணப்பியுங்கள்.