News September 1, 2025
IND Vs AUS: அனைத்து வீரர்களுக்கும் பாஸ்

இந்திய அணி, ஆஸி.,க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், வீரர்களுக்கான உடற்தகுதி சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன. ரோஹித் சர்மா, சுப்மன் கில், பும்ரா உள்பட இப்பரிசோதனையில் பங்கேற்ற அனைவரும் பாசிட்டிவ் ரிசல்ட் பெற்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். அக்.19-ல் தொடங்கும் இத்தொடரில் 3 ODI மற்றும் 5 T20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இவை நவ.8-ல் நிறைவு பெறுகின்றன.
Similar News
News September 4, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 4, 2025
சிறுவன் தற்கொலை: ChatGPT-ல் வரும் புது மாற்றம்

<<17533635>>ChatGPT<<>>-ல் அடுத்த ஒரு மாதத்திற்குள் Parental Control-ஐ அறிமுகப்படுத்த உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது. 13 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் மன அழுத்தம், துயரம் தொடர்பாக சாட் செய்தால், உடனே பெற்றோருக்கு தெரிவிக்கும் வகையில் Parental Control செயல்படும் என்றும் கூறியுள்ளது. சமீபத்தில், USA-ல் டீன்ஏஜ் சிறுவனுக்கு டிப்ஸ் வழங்கி தற்கொலைக்கு தூண்டியதாக OpenAI மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 4, 2025
உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: புடின்

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு வந்தால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என புடின் தெரிவித்துள்ளார். இருள் நிறைந்த இடத்தில் ஒரு வெளிச்சம் இருப்பதாக நினைப்பதாகவும், உக்ரைன் விவகாரத்தில் அமைதி எட்டப்படாவிட்டால், அதை ராணுவ ரீதியாக தீர்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுவரை ஜெலன்ஸ்கி உடனான நேரடி சந்திப்பை புடின் புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.