News April 9, 2024

எந்த முகத்துடன் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்?

image

தமிழகத்திற்கு எதையுமே செய்யாத பிரதமர் மோடி, எந்த முகத்துடன் தமிழகத்திற்கு வருகிறார் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பிரசாரத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு மோடி தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், தேர்தலுக்குப் பின் வரவுள்ள நாட்டின் புதிய பிரதமர் தற்போதை பிரதமர் போல இல்லாமல், தமிழக மக்கள் மீது பாசம் கொண்டவராக இருப்பார் என அவர் உறுதி அளித்தார்.

Similar News

News April 24, 2025

பள்ளியை விட கல்லூரிகளுக்கு 15 நாள்கள் கூடுதல் விடுமுறை

image

இறுதித்தேர்வு இன்றுடன் முடிந்த நிலையில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் ஜூன் 1-ம் தேதி வரையும், கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 16-ம் தேதி வரையும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளி மாணவர்களை விட, கல்லூரி மாணவர்களுக்கு 15 நாள்கள் கூடுதல் விடுமுறையாகும். எனவே, வெளியூர் மற்றும் சுற்றுலா செல்வோர் இப்போதே பயணத்திற்கான திட்டத்தை தயார் செய்யுங்கள்.

News April 24, 2025

IPL:ராஜஸ்தான் அணி பௌலிங்

image

புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி 7-வதில் உள்ள ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வென்றுள்ள ராஜஸ்தான் இன்றைய போட்டியில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை 100% இழந்துவிடும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் RCB புள்ளிப்பட்டியலில் முதல் அல்லது இரண்டாம் இடம் செல்லலாம். உங்க சப்போர்ட் யாருக்கு?

News April 24, 2025

மன்னிப்பு கேட்ட டாம் சாக்கோ.. அடுத்த ஆக்‌ஷன்?

image

‘என்னுடைய பேசும் பாணியே அப்படித்தான், எந்த உள்நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை’ என நடிகர் சங்கத்தில் ஷைன் டாம் சாக்கோ கூறியுள்ளார். தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக நடிகை வின்சி அலேசியஸ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், சாக்கோ மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட டாம், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!