News September 1, 2025
கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தொடக்கி வைக்க உள்ளார்

உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து, நேரில் கண்டறிவதற்காக, நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 9:30 மணியளவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
Similar News
News September 1, 2025
கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மனுக்களை நேரடியாக பெறுவர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, தங்கள் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
கள்ளக்குறிச்சி: இன்று முதல் உயர்கிறது

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சுங்க சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கவரி செப்டம்பர் 1 நள்ளிரவு 12 மணி அளவில் இருந்து அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகள் 190 தொடங்கி அதற்கு மேல் வரையிலான சுங்கவரி விடுப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
News September 1, 2025
கள்ளக்குறிச்சி: பஸ் மோதி பெண் உயிரிழப்பு

மடப்பட்டு மேம்பாலத்தில் ஆகஸ்ட்-30ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் சாலையை நடந்து கடக்கும் போது அரசு பேருந்து மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அடையாளம் தெரியாத பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதன் அளித்த புகாரின் பேரில் நேற்று திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.