News April 9, 2024
நாளை மாலை இறுதிச்சடங்கு

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (98) இன்று காலமானார். இவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும், மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 8, 2025
இந்திய பொருள்களுக்கு வரி.. அவகாசத்தை நீட்டித்த டிரம்ப்

USA-வில் இந்தியப் பொருள்களுக்கு வரும் நாளை முதல் 27% வரி விதிப்பு அமலாகும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான புதிய இறக்குமதி வரி விதிப்பு ஆக.1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், விலை உயர்வு, சந்தை பாதிப்பு அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.
News July 8, 2025
செல்வப்பெருந்தகை புனிதநீர் ஊற்ற அனுமதி மறுப்பு

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றும் பகுதிக்கு தமிழிசை அனுமதிக்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து பேசிய செல்வப்பெருந்தகை, என்னை தடுத்து நிறுத்தியது ஏன் என அதிகாரிகளைத் தான் கேட்க வேண்டும் என்றார். மேலும் 2000 ஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது, அதனை ஒரே இரவில் தீர்க்க முடியாது எனவும் கூறினார்.
News July 8, 2025
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்: அமைச்சர் மறுப்பு

ஊழியர்கள் பற்றாக்குறையால் தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடல் என வரும் தகவலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு தெரிவித்தார். CM ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் புதிதாக 44 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டதாகவும், அங்கன்வாடியில் 7783 பணியிடங்களை நிரப்ப நேர்முக தேர்வு நடைபெறுவதாகவும் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தற்போது 54,483 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.